தேசிய இளைஞர் சம்மளனத்தி ஏற்பாட்டில் கல்முனை தமிழ்ப் பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் சேனைக்குடியிருப்பு வின்னர் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இவ் விளையாட்டு விழா 22 ஆம் திகதி நடைபெற்றது இதில் அதிதிகளாக கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ராஜகுலசிங்கம் உவெஸ்லி பாடசாலையின் அதிபர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்