மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் வருடப்பிறப்பை முன்னிட்டு விஷேச பூஜை வழிபாடுகள்

(கல்லடி - சிவகுமார் )
பிறந்திருக்கும் துர்முகி வருடப்பிறப்பை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி ஶ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் புதன்கிழமை மாலை விஷேச பூஜை வழிபாடுகள்  நடை பெற்றன.

இவ் விஷேட பூஜை நிகழ்வுகளை ஶ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குரு ஆகம கிரிஜாமணி சிவப் பிரமஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் அவர்களிளால் நடாத்தப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ் வழிபாட்டு நிகழ்வின்போது, அடியவர்களுக்கு சிவாச்சாரியார் கைவிஷேடம் வழங்கியதுடன் தனது ஆசியையும் தெரிவித்தார்.