மோட்டார் சைக்கில் விபத்தில் ஆசிரியர் காயம்



கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த பி.இராஜேந்திரன் (வயது 41) என்ற இவர் பிரதான வீதியினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்றெ;றுள்ளது.   மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்