எதிரிகள் ஆஜராகாத வழக்குகள் மற்றும் பராமரிப்பு வழக்குகளில் கிராம சேவையாளர்கள் நீதிமன்றில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமென மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலார்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிரிகள், பிரதிவாதிகளின் வதிவிட விபரங்களை வெறும் அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அனுப்பாது, நேரடியாக உரிய கிராம சேவையாளர்களே நீதிமன்றுக்கு ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமென நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கிராம சேவையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.












