(சித்தா)

இன்று 04.03.2017 போரதீவுப் பற்றுக் கோட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகள் போரதீவுப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் தலைமையில் மட்/பட்/ வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மங்கல விளக்கேற்றப்பட்டு, தேவாரம் பாடப்பட்டு இந் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தலைவர் தமது உரையில் வெறும் பாடப் புத்தகங்களினாலும், விரிவுரை வழிகாட்டியினதும் ஊடாக மாத்திரம் தமிழை வளர்க்கமுடியாது, தமிழ் இலக்கியத்தை வளர்க்கமுடியாது தேடல் உள்ளவர்களால் மாத்திரமே தமிழை வளர்க்கமுடியும் எனவே அனைவரும் தேடல் உள்ளவர்களாக மாறவேண்டும் என விழித்துக் கொண்டார்.
போட்டி நிபந்தனைகள் பட்டிருப்பு கல்வி வலய தமிழ் மொழிப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.க.குணசேகரம் அவர்களால் விளக்கப்பட்டது. மட்/பட்/திருப்பழுகாமம் விபுலாநந்த வித்தியாலய அதிபர் திரு.ஆ.புட்கரன் போட்டி நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
தமிழ் மொழிப் போட்டிக் குழுவினர்களால் புலமை வாய்ந்த நடுவர் குழாத்தினர்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததனால்; போட்டிகள் யாவும் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டன.