மட்டக்களப்பு யுவதியின் இறப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்

இளைஞர்களால் கடத்தி செல்லப்பட்ட யுவதி வீதி விபத்தில் பலி என்று ஒரு செய்தி வெளிவந்திருந்தது இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன இது தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள தகவல்

உயிர் இழந்த பெண்ணும் மட்டக்களப்பு திமிலைதீவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பல காலமாக காதலித்து வந்துள்ளனர் இந்த காதல் விவகாரம் பெண் வீட்டார் காதுகளுக்கு எட்ட பெண் வீட்டார் உயிரிழந்த பெண்ணை இவர்கள் காதலை இல்லாமல் செய்யும் நோக்கில் இந்தியா அனுப்பி படிப்பித்துள்ளனர் ஆனாலும் இந்தியாவிலும் இருந்து தனது காதலை குறித்த இளைஞனுடன் தொடர்ந்த இப்பெண் அண்மையில் இலங்கை வந்துள்ளார்

இந்த வேளையில் குடும்ப சகிதம் இவர்கள் திருகோணமலை சென்று வந்துகொண்டிருக்கும் போது உயிரிழந்த பெண் தன் காதலனுக்கு நாங்கள் இந்த இலக்கமுடைய காரில் வந்து கொண்டிருக்கிறோம் நான் இடையில் ஏதாவது சொல்லி காரை நிறுத்தி இறங்குகிறேன் என்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்

இதற்கமைய இளைஞனும் செல்ல வழியில் இடை நடுவே காதலனை கண்டதும் சிறுநீர் கழிக்கவென கூறி ஒரு கடையில் நிறுத்துமாறு கூற உறவினர்களும் காரை நிறுத்தி உள்ளனர் அதன்போது காரில் இருந்து இறங்கிய பெண் காதலனின் மோட்டார் சைக்கிளில் எறியுள்ளார் காதலனும் மோட்டார் சைக்கிளை இயக்கி பயணிக்க இதை எதிர்பார்க்காத உறவினர் காரில் பின்தொடந்து சென்று மோட்டார் சைக்கிளில் மோதி விழ வைத்துள்ளனர் .

இதன் போது காதலனின் நண்பரும் மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த பிள்ளைக்கு பின்னால் இருந்துள்ளார் பின்னர் அங்கு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது  பெண்ணின் தலையிலும் ஹெல்மெட் இனால் தாக்கியுள்ளனர்

பின்னர் குறித்த இடத்திற்கு போலீசார் விரைய காயமடைத்த மூவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து காரில் வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்

அவர்கள் காதலர்கள் என்பதற்குரிய சகல ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் இதே வேளை ஒரு வருடத்தின் முன் தான் காதலனுடன்தான் வாழப்போவதாக பையனின் வீட்டில் உயிரிழந்த பெண் போய் இருந்ததாகவும் பின் போலீசில் முறைப்பாடு செய்து பதினெட்டு வயதானதும் நீங்கள் சேரலாம் இப்போ உங்களுக்கு வயது போதாது என பெண் வீட்டார் பிரித்து சென்ற வழக்கும் ஒன்று பொலிஸில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்

எது எவ்வாறெனினும் வயதுக்கு வராத காதல் மோகத்தினாலும் பெற்றாரின் அவசர நடவடிக்கைகளாலும் இன்று வாழ வேண்டிய ஒரு உயிர் பிரிந்து சென்றுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்

எனினும் பெண்ணின் பெரியப்பாவும் காரை செலுத்தி சென்றவர்களும் தற்போழுது போலீசார் காவலில் விசாரணைக்காக உள்ளதால் விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்கவேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது