மட்/ மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலத்தில் கல்விக்கரசியின் சிலை திறப்பு

(சித்தா)
நவராத்திரி விழாக்களின் இறுதி மூன்று நாட்களும் கல்வியின் அரசி சரஸ்வதிதேவிக்குரிய நாளாகும் இத் தினங்களில் பாடசாலைகள், கல்விக் கூடங்கள், அரச திணைக்களங்கள், வீடுகள், தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில் விசேட பூசைகளும் சிறப்பு  வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. 
இந்த நன்நாளில் மட்/ மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலத்தில் சரஸ்வதிதேவியின் சிலை திறந்து வைத்துள்ளமை எல்லோராலும் பாராட்டத்தக்க விடயமாகும். மட்/ மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலத்தின் அதிபர் செல்வி. வ.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இச் சிலை திறப்பு விழாவில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சிலைக்கு பூமாலை அணிந்து சிலையினை திறந்து வைத்தார்.
இத்துடன் போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன், பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆரம்பப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், பட்டிருப்பு கல்வி வலய கணனி வள நிலைய முகாமையாளர் திரு.செ.திவ்வியராஜ், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.கு.ஜதீஸ்குமார் அவர்களுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சரஸ்வதிதேவிக்கான விசேட பூசையும் ஊர்வலமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்