வாழைச்சேனையில் வீடு தீக்கிரையாகி முற்றாக சேதம்! பாடசாலை புத்தகங்கள் சீருடைகள் உட்பட..


கல்குடா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு மருதநகரில் வீடு ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழைச்சேனை, மருதநகர், நாககன்னி ஆலய வீதியைச் சேர்ந்த நாளாந்த கூலி தொழிலாளியான காளியப்பன் பாஸ்கரன் என்பவரது வீடே இவ்வாறு தீயில் கருகி நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தீ பிடித்து வீடு எரிவதை அவதானித்த அருகில் உள்ள உறவினர்கள் தீயை அனைப்பதற்கு முயற்சித்தும் வீடு முற்றாக எரிந்ததுடன் வீட்டில் உள்ள அனைத்து உடமைகளும் தீயில் கருகி அழிவடைந்து விட்டதாகவும் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாடசாலை செல்லும் பிள்ளையின் பாடசாலை புத்தகங்கள் பாடசாலை உபகரணங்கள், புத்தக பைகள், உடைகள், வீட்டு உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் ஒன்றரை  வயதுடைய குழந்தையின் அனைத்து பராமரிப்பு பொருட்களும் தீயில் கருகியுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை கல்குடா பொலீஸார் மேற்கொண்டுள்ளனர்.