விபுலானந்தா கல்லூரியின் விழிப்புணர்வு நடைபவனி

(கதிரவன்)

திருகோணமலை விபுலாநந்தா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு பாடசாலை சமுகம் வீதி நடை ஒன்றினை  சனிக்கிழமை 2017.09.30 நடத்தியது. கல்லூரி அதிபர் ஆர்.ஜெரோம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  முந்நாள் அதிபர்களான எஸ்.அழகரெத்தினம், க.சந்திரகாந்தன், கோ.செல்வநாயகம், செ.புவனேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகளுக்கு 70 வருட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. போதையற்ற உலகினை உருவாக்குவோம், போதை பழக்கங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்போம்  என்பனவற்றை விளக்கும் பதாதைகளும் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை விளக்கும் கைநூல் ஒன்றும் ஆசிரியர் கு.நளினகாந்தனால் தொகுக்கப்பட்டு நடைபவனியின் போது பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.