
கல்குடா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டியடிச்சேனையில் முச்சக்கர வண்டி ஒன்று தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்குடா, பட்டியடிச்சேனை, ஜி. ரி. ஸட் வீட்டுத்திட்டத்தை சேர்ந்த க.சந்திரமோகன் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயில் கருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை (7) அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் நித்திரையில் இருக்கும்போதே இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் வித்தியாசமான கருகிய வாசம் வருவதை உணர்ந்த வீட்டில் இருந்தவர்கள் உடனே வெளியில் வந்து பார்க்கும்போது முச்சக்கர வண்டி எரிவதை அவதானித்துள்ளனர்.
அருகில் உள்ளவர்களின் உதவியுடன் தீயை அணைப்பதற்கு முயற்சித்தும் முச்சக்கர வண்டி எரிந்து நாசமாகியுள்ளது.
இத்தீயினால் வீட்டின் சிறு பகுதியும் எரிந்துள்ளது.
அருகில் உள்ளவர்களின் உதவியாலும் தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததால் வீடு முழுவதும் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பாக கல்குடா பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






.jpg)




.jpg)


