இலங்கையில் முடக்கப்படவுள்ள பேஸ்புக் கணக்குகள்

சமூக வலைத்தளங்கள் மூலமாக இனவாத கருத்துக்கள் மற்றும் மதவாத கருத்துக்களை வெளியிட்ட, வெளியிடும் பேஸ்புக் கணக்குகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

பேஸ்புக் நிறுவனம் அரசாங்கத்துக்கு அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைவாக இவ்வாறான கணக்குகளை நிரந்தரமாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திடம், அரசாங்கம் பல கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களுக்கு அமைவாக பேஸ்புக் நிறுவனமும் மற்றும் இலங்கை அரசாங்கமும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது