[NR]
அன்றையதினம் காலை கொடித்தம்பமானது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பின்னர் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரையுள்ள சுப முகூர்த்த வேளையில் கிரியைகள் நடைபெற்று மங்கள இசை முழங்க கொடித்தம்பம் நடப்பட்டது. இந்நிகழ்வினை ஆலயபரிபாலன சபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் அவர்கள் தலைமையேற்று நடாத்தி வைத்தார்.
இக் கொடிமரமானது, காட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட "26 அடி உயரமுடையதும் , 2 அடி விட்டமுடைய" நாகமரத்திலானது மற்றும் இக் கொடி மரத்தின் அதன் அமைப்புவேலைகளை களுவாஞ்சிக்குடி லாவண்யா நகைமாட உரிமையாளர் கே.பாக்கியராஜா உபயகாரராக பொறுப்பேற்று நடாத்துகின்றார். இதற்கென சுமார் 15லட்சருபா செலவாகின்றது. அண்மையில் ஆலயத்தலைவர் சு.சுரேஸ் தலைமையிலான பரிபாலன சபையினர் விடுத்த வேண்டுகோளையேற்ற திரு.பாக்கியராஜா கொடிமரத்தின் கீழுள்ள மண்டப மாபிள் வேலைகளையும் பொறுப்பேற்றுள்னார்.
ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிசேக பெருவிழா நிகழ்வானது எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.