கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பங்குகொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகமவின் தலைமையிலான குழுவொன்று நாளை சிங்கப்பூர் பயணமாகவுள்ளது.
இந்த குழுவில் கிழக்கு மாகாண உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில், கிழக்கு மாகாண மற்றும் திருகோணமலை நகர திட்டமிடல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.