பெண்ணொருவரை தாக்கி பணம் பறித்த குற்றச்சாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இன்று முற்பகல் அவர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
அவர்கள் குறித்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













