நீதிமன்றத்திலும் கொள்ளை !! பல வழக்கு உபகரணங்கள் திருட்டால் பொலிசார் தீவிரம் !!


இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் வழக்கு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை சிலரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரியின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அங்கிருந்த அநேகமான உபகரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

அவ்விடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 4 கிலோ கிராம் கஞ்சா நீதிமன்ற வளாகத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை மோப்ப நாய்களை பயன்படுத்தி நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதைய நிலையில் தீவிர  சோதனையிடப்படுவதாக கூறப்படுகின்றது.