இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர் திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை உப்புவெளி - ஆண்டாங்குளம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகத்திற்குரியவர், கொலை குற்றம் புரிந்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, வழக்கை விசாரணை செய்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் இந்த தீர்ப்பை அறிவித்தார்.













