கிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா செப்டெம்பர் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது

கிழக்கில் கண்ணகி அம்மன் ஆலய வழிபாடு இங்குள்ள மக்களின் வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்த ஒன்றாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள குக் கிராமங்கள் தோறும் கண்ணகி அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டு மிகவும் பக்தி பூர்வமாக அவ் விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கண்ணகி அம்மன் வழிபாட்டினையும், தமிழர் பண்பாட்டினையும் எடுத்து இயம்பும் வகையில் கிழக்கில் ஒவ்வொரு வருடமும் கண்ணகி கலை இலக்கிய விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இம் முறை எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் செப்டெம்பர், 08ஆம் 09 ஆம் ஆகிய தினங்கள் நடைபெறவுள்ளது.
சோழ நாட்டில் பிறந்து பாண்டிய நாட்டிலே வழக்குரைத்து சேர நாட்டில் தெய்வமான கண்ணகி ஈழநாட்டில் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் வழிபாட்டிற்குரிய தெய்வமானவள். பின்னாளில் கண்ணகி ' கண்ணகை அம்மன்' என கிழக்கிலங்கையில் நிலைபெற்று விடுவதுடன் கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் ஆகிவிடுகின்றாள்.
கிழக்கிலங்கையில் வைகாசித் திங்கள் அவளுக்குரியதாகும். இதன்போது கிழக்கிலங்கை விழாக்கோலம் பூணும். கண்ணகிக்குரித்தான வைகாசி மாதத்தில் அவளை நினைவு கூரவும், அவளது இலக்கியங்களைப் பரவலாக்கவுமான நோக்குடன் கண்ணகி கலை இலக்கிய விழா 2011–06-08 அன்று தொடக்கி வைக்கப்பட்டது. இக் கூடலின் தலைவராக செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் செயற்படுகின்றார். இவரின் முயற்சியினாலும் கண்ணகி கலை இலக்கிய கூடல் நிர்வாகிகள் மற்றும் அபிமானிகள் மூலம் கிழக்கில் மாபெரும் கண்ணகி கலை இலக்கிய விழா வருடந்தோறும் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
செப்டெம்பர் 07 வெள்ளிக்கிழமை பி.ப.2மணி தொடக்கம் 6 மணிவரை கவுந்தியடிகள் அரங்கில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் கொம்பு முறி விளையாட்டு விழா நடைபெறவுள்ளது.
செப்டெம்பர் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதலாம் நாள் காலை தொடக்க விழா காலை 7 மணிக்கு ஆரம்பமாகின்றது. காலை 7 மணிதொடக்கம் மு.ப.9 மணிவரை பண்பாட்டுப்பவனி நடைபெறவுள்ளது. துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, எருவில், மகிழுர், களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் பண்பாட்டுப்பவனிகள் ஒன்றிணைந்து விழா நடைபெறும் பிரதான மண்டபத்தை வந்தடையும்.
இவ் ஊர்வலத்தில் கண்ணகி வழிபாட்டு அம்சங்கள், தமிழர் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களுடன் ஊர்திகளும், நடன நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இதில் முதன்மை அதிதிகளாக அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மகளிர் விவகார மனிதவலு அமைச்சின் செயலாளர் க.கருணாகரன், கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன், வீதிப்போக்குவரத்து ஆணையாளர் கோ.மதிவண்ணன், பேராசிரியர் வே.குணரெத்தினம், சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா, ஓய்வு நிலை சிறைச்சாலை ஆணையாளர் இரா.இராஜேஸ்வரன், ஆகியோரும் சிறப்பதிதிகளாக இன்னும்பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காலை அமர்வு -01
மு.ப.9மணி தொடக்கம் மு.ப.11 மணிவரை கூலவாணிகன் சாத்தனார் அரங்கில் விழாக்கழு தலைவர் ப.குணசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இங்கு பேராளர் பதிவு, தமிழ் மொழி வாழ்த்து, கண்ணகி கலை இலக்கிய விழாக் கீதம், வரவேற்பு நடனம், அரங்க அறிமுகம், கண்ணகி இலக்கிய விழாப்பட்டயம் வாசித்தல், தொடக்கவுரை, கூடல் விழா மலர் வெளியீடு, ஆகியன இடம்பெறவுள்ளன.
காலை அமர்வு -02

மு.ப.11.15 மணி பி.ப1.40 மணி வரை சதாசிவ ஐயர் அரங்கில் விழாக்குழு உறுப்பினர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் வசந்தன் கவித்திரட்டு(மீள்பதிப்பு) நூல்வெளியீடு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல், ஓவியக்கண்காட்சி, நூலங்காடி, கண்ணகி கலை இலக்கிய விழா விபரண ஒளிப்படக் காட்சி, ஆகியன இடம் பெறவுள்ளன.

முதலாம் நாள் மாலை அமர்வு-01
பி.ப.3மணி 7.00 மணி வரை இயல் அரங்கில் கலாபூஷணம் ஆ.அரசரெத்தினம் தலைமையில் ஆரம்பமாகின்றது இதில் முதன்மை அதிதிகளாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன், விவசாய, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன், அரசதொழில்முயற்சி கண்டி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர்செ.அருள்ராஜா, அம்பாறை மேலதிக செயலாளர் க.விமலநாதன், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகர் கு.சுகுணன், ஓள்வு நிலை பிரதிப் பிரதம செயலாளர்கி.பாஸ்கரன், இலக்கியச் செம்மல் பராரதீஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதேபோல் சிறப்பு அதிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இங்கு வரவேற்பு நடனம், அரங்க அறிமுகம், பட்டிமன்றம், சிறப்புச் சொற்பொழிவு தமிழ்நாடு போராசிரியர் தி.சு.நடராசன், கவியரங்கு, ஆகியன் நடைபெறவுள்ளன.
செப்டம்பர் 09 ஆம் திகதி இரண்டாம் நாள் அமர்வு- 01
காலை மு.ப.9.30 மணி மு.ப.12.35 மணிவரை இளங்கோவடிகள் அரங்கில் ஆய்வரங்கத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பேராசிரியர் சி.மௌனகுரு தலமையில் கிழக்கிலங்கைப் பண்பாட்டில் பெண் தெய்வங்கள் எனும் பொருளில் ஆய்வரங்கு நடைபெறவுள்ளது.
இதில் முதன்மை அதிதிகளாக கலாநிதி வ.கனகசிங்கம், கலாநிதி க.சிதம்பரநாதன், கலாநிதி ச.ஜெயராஜா, கலாநிதி சுஜாராஜினி வரதராஜன், கலாநிதி ஞா.தில்லைநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆய்வரங்கில் பேராசிரியர் செ.யோகராசா, திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ், கலாநிதி சி.சந்திரசேகரம், கலாநிதி வ.இன்பமோகன், விரிவுரையாளர் க.மோகனதாசன், ச.மணிசேகரன், சொ.பிரசாந், த.ரமீஸ்குமார் ஆகியோர் ஆய்வு மதிப்பீட்டாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இரண்டாம் நாள் மாலை அமர்வு -02
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் அதிபர் பே.காப்தீபன் தலைமையில் பி;ப.2.30 தொடக்கம் 3.30 மணி வரை விவாத அரங்கு நடைபெறவுள்ளது. இங்கு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விவாதப்போட்டியில் தெரிவான இறுதிச்சுற்று அணிகளின் ஆற்றுகை பரிசளிப்பு என்பன இடம்பெறவுள்ளது.
இரண்டாம் நாள் அமர்வு -03
கலை அரங்கும் நிறைவு விழாவும் மாதவி அரங்கில் சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீ;கந்தராசா தலைமையில் பி.ப.3.30 மணி தொடக்கம் இரவு 8.30 மணிவரை நடைபெறவுள்ளது.
கலை அரங்கும் நிறைவு விழாவும் மாதவி அரங்கில் சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீ;கந்தராசா தலைமையில் பி.ப.3.30 மணி தொடக்கம் இரவு 8.30 மணிவரை நடைபெறவுள்ளது.
இதில் முதன்மை அதிதிகளாக வைத்தியகலாநிதி வே.விவேகானந்தராஜா, ஒய்வு நிலை நீதிபதி திருமதி வி.சந்திரமணி, மாகாணசபை செயலாளர் வெ.தவராசா, வீதி அபிவிருத்தி திணைக்களம் பணிப்பாளர் வ.கருணநாதன், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் சோ.தனபாலசிங்கம், கலாபூஷணம் செ.எதிர்மன்ன சிங்கம், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், பிரதம கணக்காளர் ச.நேசராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இங்கு மாதவி அரங்கில் நடன நிகழ்வுகள், குளிர்த்திப்பாடல்கள், கரகாட்டம், வில்லுப்பாட்டு, உட்பட பல கலை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளதுடன் கலை இலக்கியம், பண்பாடு மற்றும் ஆய்வுப்பணிகளுக்காக கண்ணகி கலை இலக்கியக் கூடலின் விபுலானந்த விருது வழங்கி செல்வி கதிராமன் தங்கேஸ்வரி கௌரவிக்கப்படவுள்ளார். விழா நிறைவுரையினை மா.சதாசிவம் நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.jpg)