தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு



இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் தம்பிலுவில் கிளையின்  சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு மற்றும் தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் , பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது  11.10.2018 வியாழக்கிழமை இன்றையதினம் வங்கி முகாமையாளர் தலைமையில் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய சேமிப்பு வங்கியின் ஓய்வுபெற்ற முகாமையாளர் திரு.விவேகானத்தராஜா, சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் திரு.கண.இராசரெத்தினம் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளான முதியோர்கள் ,   மாணவ,மாணவிகள்  மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள்,  வங்கி ஊளியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்  இந்நிகழ்வின் போது  கடந்த வருடம் (2017) தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர்களான மாணவர்களுக்கான  சான்றிதழ்களும், பரிசில்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டதுடன் சிரேஷ்ட பிரஜைகளான முதியோர்களுக்கான பரிசில்களை வங்கி முகாமையாளர் திரு ஏ. அன்ராடோ மற்றும் உதவி பதில் முகாமையாளர் திரு.கௌரிதீபன் ஆகியோர் வழங்கிவைத்தனர்.