(செல்வராசா-லோஜிதா)
குழந்தையின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் வகிபங்கு
ஒரு சமுகத்தின் மிகச்சிறிய ஆக்க அலகுகளாக பெற்றோர்களும் அவர்களது வாழ்க்கையின் ஒளி விளக்குகளாக குழந்தைகளும் காணப்படுகின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை ஆற்றலும் ஆளுமையும் உள்ள பிள்ளைகளாக மாற்றியமைக்க வேண்டுமெனின் கருவறையிலிருந்தே பிள்ளைக்கு கற்பித்தலை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.

ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகளின் ஆரம்ப அறிவுவிருத்தி தொடர்பாக அறிந்திருப்பது அவசியமானதாகும். குழந்தைகளின் அறிவு நினைவாற்றல் ஞாபகம் எவ்வாறு வளர்ந்துள்ளது? அறிவினை எவ்வாறு விருத்தி செய்யலாம்?
செல்வராசா-லோஜிதா

தாயின் கருவறையில் இருந்து கற்க ஆரம்பித்த குழந்தையானது தனது குடும்பம் அதுசார் சூழலில் இருந்தும் கற்க ஆரம்பிக்கின்றது. அதனையடுத்து குழந்தையானது தாயெனும் ஆசானிடமிருந்து விடைபெற்று முன்பள்ளி வட்டத்துள் கால்பதித்து புதுமுகங்களுடன் பழக ஆரம்பிக்கின்றது. இவ்வாறு குழந்தை புதிய சூழலுடன் இசைவாக்கப்படவு இயைந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இவ்வாறான பலதரப்பட்ட சூழலிலிருந்து வரும் குழந்தைகளை வழிப்படுத்தி வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய அறிவு ஒவ்வொரு ஆசிரியருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
இவற்றினை அடிப்படையாகக் கொண்டு முன்பள்ளிப்பருவ செயற்பாட்டினை எவ்வாறு குழந்தைளின் முழுமையான விருத்தியை நோக்கி நகர்த்தலாம் என்பது தொடர்பான அறிவு ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவசியமானதாகும். மனித வாழ்வில் பிரதான வளர்ச்சிக்கட்டங்களை குழந்தைப்பருவம்இ பிள்ளைப்பருவம்இ கட்டிளமைப்பருவம் வளர்ந்தோர்பருவம் என வகைப்படுத்தலாம்.

இவற்றில் பிள்ளைகளின் ஆரம்பநிலை விருத்திப்பருவமானது மிக முக்கியமானதாகும.; ஏனெனில் இதிலேதான் பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அறிவுஇ நடத்தைசார் அம்சங்களுக்கான அத்திவாரமிடப்படுகின்றது. அந்தவகையில் இவைதொடர்பான அறிவினையும்இ தெளிவினையும் கொண்டிருத்தல் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு இன்றியமையாததோடு வெற்றிகரமான கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
பிள்ளைகளின் வளர்ச்சிக் கட்டங்கள் தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் பலதரப்பட்ட கருத்துக்களையும்இ கொள்கைகளையும்இ கோட்பாடுகளையும் முன்வைத்துள்ளனர். அந்தவகையில் ஆர்னலட்கெஸலினஇ; வில்கெம்வூண்ட்இ சிக்மன்பிறைட்இ இயன்பவ்லோவ்இ ஜீன் பிஜாஜேஇ அல்பிறட்பீனே போன்றோர் முக்கிய இடம் வகிக்கின்றனர்.
குழந்தைப்பருவமானது சகலவிதமான அடிப்படை ஆற்றல்களோடும் பிறக்கும். சாதாரண குழந்தை தான் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தூண்டல் துலங்கலைக் காட்டும் அதேவேளை தான்வாழும் தன்மையினையும் வளர்ச்சியையும் தீர்மானிக்க முற்படும். குழந்தையின் வாழ்வில் முதல் வருடமானது விருத்திக்குரிய சாதகமான சூழலை வழங்குவதோடு தான் சார்பான வளர்ந்தோரிலேயே முற்றாக தங்கியிருக்கும். அதனையடுத்த வருடம் குழந்தையால் மொழியை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டாலும் அசைவுக்கேற்ற திறன்களைக்கொண்டு மெதுவாக கற்க ஆரம்பிக்கின்றது.
பிள்ளைக்கு சிறந்த விருத்தியை ஏற்படுத்த வேண்டுமெனில் இயற்கையான உடல் வளர்ச்சி மட்டுமன்றி கற்றலும் நடைபெற வேண்டும். கற்றலின்றி உடல் வளர்ச்சியோ உடல் வளர்ச்சியின்றி கற்றலோ வெற்றிகரமான பிள்ளை விருத்திக்கு ஏதுவாக அமையாது. எனவேதான் கற்றலுடனான இயற்கை விருத்தி பிள்ளை விருத்திக்கு அவசியமாகும்
. இவ்வாறு குழந்தையின் முன் பிள்ளைப்பருவம் பின் பிள்ளைப்பருவம் அவர்களது உடலியக்க வளர்ச்சி அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்பன பற்றி ஆசிரியர் அறிந்திருப்பது அவசியமானதாகும். இவற்றினை அடிப்படையாகக் கொண்டு தனது கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு வெற்றிகரமாக நகர்த்தலாமென்ற தெளிவு ஆசிரியருக்கு அவசியமானதாகும்.
முன்பள்ளியிலே பல்வேறுபட்ட பிள்ளைகள் வருவார்கள் அவர்கள் வௌ;வேறு இயல்பு உடையவர்களாகவும் உடலியக்க செயற்பாடு உடையவர்களாகவும் காணப்படுவர். உதாரணமாக சில குழந்தைகள் நல்ல சுறுசுறுப்பாகவும் சில குழந்தைகள் சுறுசுறுப்பற்றும் காணப்படலாம.; இவ்வாறு ஏன் வேறுபடுகின்றது என்பதைக் கண்டறிந்து தீர்வு வழங்குவது ஒவ்வொரு ஆசிரியருக்கும் இன்றியமையாததாகும்.

இவ்வாறு ஆசிரியர் பிள்ளையின் விருத்திக்குத் தடையான காரணிகளைக் கண்டறிந்து குழுவாக பிள்ளைகளை செயற்படச் செய்து விளையாட்டுகளில் ஈடுபடச் செய்து ஒவ்வொருவரது உடல் வளர்ச்சிக்கேற்பவும் தனது கற்பித்தலை மேற்கொள்வதன் மூலம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த முடியும்.
சிறந்த எடுத்துக்காட்டாக முன்பள்ளி குழந்தைகளை குழுக்களாக்கி ஓட்டப்பந்தயம் சறுக்கல் நீச்சல் நடனம் உடற்பயிற்சி போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவற்றுக்கிடையேயுள்ள உடலியக்க விருத்தி சார் வேறுபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய பிள்ளையின் உடலியல் விருத்தி தொடர்பான அறிவு ஆசிரியருக்கு அவசியமானதாகும். இதன்மூலம் பிள்ளையின் விருத்திக்கேற்றவாறு கற்றலை மேற்கொண்டு முன் பள்ளிச் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்தலாம்.
தன்னிச்சையான அடிப்படைத்திறன்களில் காணப்படும் ஒன்றினைதலும் இயைபூக்கம் காரணமாக படிப்படியாக ஏற்படும் சிக்கலான திறன்களூன வளர்ச்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இணைந்து வெல்லும் போது இவ்வாறான பிரச்சனைக்குரிய பருவம் ஏற்படுகின்றது. பிள்ளையானது உடல் புலக்காட்சி நுண்ணறிவு ரீதியாக தொழிற்பட போதியமுதிர்ச்சியும் ஏற்படுகின்றது.

குழந்தைகளின் இயக்கத்திறனைக் கட்டுபடுத்த விளையும் போது அதன் ஏனைய திறன் விருத்தியையும் இழக்க நேரிடும். ஆயினும் பிள்ளைகளின் இயக்கத்தில் சில குறைபாடுகள் காணப்படுவது பொது நிகழ்வாகும். இதனை நிவர்த்தி செய்ய பல்வேறு வழிகள் காணப்படுகின்றன.
இயக்கத்திறன் விருத்தியை மேற்கொள்ள வெறுமனே பிள்ளைக்கு எழுத்துப் பயிற்சிகளை மட்டும் மேற்கொள்ளாது பிள்ளையின் மூளை தசைநார்கள் போன்றன சிறப்பாக செயற்படக்கூடிய வகையில் நீந்தல் ஆடல் பாடல் கண்கட்டி விளையாடல் ஊஞ்சலாட வைத்தல் மண்ணில் விளையாட வைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்தி அவர்களின் இயக்கத்திறனை விருத்தியடையச் செய்தல் ஆசிரியரது பொறுப்பும் கடமையும் ஆகும்.
பிள்ளையை சிறந்த வகையில் வழிநடத்தி முன்பள்ளிச் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்த ஆசிரியருக்கு பிள்ளையின் புலனுணர்ச்சி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். ஏனெனில் மீத்திறன் கூடிய பிள்ளைகளும் குறைந்த பிள்ளைகளும் வகுப்பறையில் காணப்படுவர். அவரவர் திறன்களுக்கு ஏற்றாற்போல் கற்பித்தலை மேற்கொண்டு அனைத்துப்பிள்ளைகளிலும் முழுமையான விருத்தியை ஏற்படுத்துவதே ஆசிரியரது இலக்கு.

அந்தவகையில் புலனுணர்வினூடாக பிள்ளைகளை விருத்தியடையச் செய்யலாமெனின் வர்ணப்படங்கள் உருக்களை இனங்காணல் வித்தியாசங்களை இனங்காணல் சிறுவர் அல்லது வண்ணப்பூங்காக்களுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள இயற்கைக்காட்சி ஒலிகள் போன்றவற்றை அவதானிக்கச் செய்தல் போன்றவற்றினூடாக முன்பள்ளி விருத்திச் செயற்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்.
எனவே பிள்ளையின் புலனுணர்ச்சி சார் விருத்தி தொடர்பான அறிவு ஆசிரியருக்கு அவசியமானதாகும். வகுப்பறை கற்றல் கற்பித்தலை சிறந்த வகையில் மேற்கொண்டு செல்ல பிள்ளைகளின் சமுக மனவெழுச்சி பற்றிய அறிவும் ஆசிரியருக்கு இன்றியமையாததாகும். இதன்மூலம் பிள்ளைகளின் முன்பள்ளிச் ;செயற்பாட்டை சிறப்பாக திட்டமிட்டு விளையாட்டு நடனம் உரையாடல் கைகுலுக்கல் போன்றவற்றின்; மூலம் பிள்ளைகளை சமுகமயமாக்கி அதன்மூலம் அவர்களிடையே அன்பு பாசம் ஒற்றுமை விட்டுபக்கொடுப்பு போன்ற நற்பண்புகளை விருத்தியடையச் செய்ய வேண்டியது ஆசிரியர்களது பொறுப்பும் கடமையும் ஆகும்.
குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான அனுபவத்தில் மொழிவிருத்தியானது அவசியமான ஒன்றாகும். இது ஆசிரி;யர் மாணவர்களது உரையாடல் மூலம் வளர்க்கப்படுகின்றது. அந்தவகையில் சமவயதுக் குழந்தைகளுக்கிடையே ஆசிரியர் ஆடி கதைகளைக் கூறிவிட்டு அதனை குழந்தைகளிடம் செய்துகாட்டும்படி தூண்டுதல் சந்தைகள் பொருட்காட்சிகள் நடாத்தி பொருட்களின் பெயர்களைக் கூவி விற்கச்செய்தல் வர்ணப்படங்களைக் காண்பித்து அதன் பெயர்களை உச்சரித்துக்காட்டல் குழந்தைகளுடன் மழலை மொழியில் பேசாமல் சிறந்த உச்சரிப்பை உச்சரி;த்தல் இயற்கை ஒலிகளை கேட்கவைத்தலும் அதனைப்போல ஒலியெழுப்பக் கற்றுக்கொடுத்தலும்; எல்லா மொழிகளிலும் கற்பித்தல் அதாவது சிறு சிறு சொற்கள் வசனம் போன்றவற்றைக் கற்பித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் மொழி விருத்தியை ஏற்படுத்தலாம்.

அதேபோல் அறிவுசார் வளர்ச்சி பற்றிய அறிவும் வெற்றிகரமான முன்பள்ளி ஆசிரியருக்கு இன்றியமையாததாகும். அறிவுசார் எனும் சொற்பதம் அறிவு ஞாபகம் நினைவு பிரச்சனைகளைத் தீர்த்தல் எண்ணக்கருக்களை சிந்தித்தல் போன்ற அறிவாற்றலுக்குரிய அம்சங்களை சுட்டி நிற்கின்றது. அறிவாற்றல் தொடர்பான ஆய்வுகளை பிஜாஜே வுhந pளலஉhழடழபல ழக iவெநடடபைநவெ(1950) எனும் நூலில் முன்வைத்துள்ளார். இவர் தனது3பிள்ளைகளை 30 வருட அவதான சிகிச்சை முறைமூலம் ஆய்வு செய்து அறிவுசார் கொள்கையை முன்வைத்தார்.
ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகளின் ஆரம்ப அறிவுவிருத்தி தொடர்பாக அறிந்திருப்பது அவசியமானதாகும். குழந்தைகளின் அறிவு நினைவாற்றல் ஞாபகம் எவ்வாறு வளர்ந்துள்ளது? அறிவினை எவ்வாறு விருத்தி செய்யலாம்?
அனுபவத்தினூடாக அறிவை ஊட்டும் புதிர்கள விடுகதைகள் போன்றவற்றைக் கேட்டல் விரல்கள் புளியம்விதைஇ கட்டைகள் என்பவற்றைக் கொண்டு எண்ணுதல். விதைகள கோழிஇறகுஇ பஞ்சு போன்றவற்றால் உருவங்களின் மேல் ஒட்டுதல் படங்களுக்கு நிறம்தீட்டச் செய்தல் கழிவுப்பொருட்களில் அங்கம் செய்யவைத்தல்இ குறிப்பிட்ட பொருட்களை இனங்காணச் செய்தல்இ பிள்ளைகள் கேட்கும் கேள்விகளுக்கு சரிப்படையாமல் பதிலளித்தல்;;இ பிரச்சனையின் போது குழந்தையுடன் உணர்வுபூர்வமாக உரையாடி தீர்வினைக்காணல்
. முன்பள்ளி ஆசிரியர் பிள்ளையின் சிந்தனையைத் தூண்டும் விதமாக கேள்வியெழுப்பி அவர்களிடமிருந்தே பதிலைப் பெறவேண்டும் என ரூசோ கூறுகின்றார். உதாரணமாக கிளியின் நிறமென்ன? நிறமென்ன? அது எவ்வாறு குரலெழுப்பும்? போன்ற வினாக்களைத் தொடுத்து அவர்களிடமிருந்தே விடையைப் பெற வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளையின் நுண்ணறிவை வளர்க்கக்கூடிய தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கூறியவற்றை தொகுத்து நோக்கும் போது ஆசிரியர்களின் பிள்ளைகளின் தன்மைகளை இனங்கண்டு அவர்களின் வயர்ச்சிக்கட்டம் பற்றிய அறிவுடன் வகுப்பறைப் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் இன்றைய நிகழ்கால வகுப்புக்களே நாளைய தலைவர்களை உருவாக்குகின்றது. இவ்வாறான அறிவு அனுபவத்தோடு கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளின் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்த முடியும்.

தற்காலத்தில் பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்த இலங்கை அரசு போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 2017ம் ஆண்டில் ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாக கற்பித்தல் சுதந்திரம் ஆசிரியர்களை வலுப்படுத்தல் போன்றன அமைந்திருந்தன. இதன் அடிப்படை நோக்கம் பிள்ளைகளின் கல்வி விருத்தியே ஆகும். எனவே பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய பூரண அறிவுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் போது நவீன சூழலுக்கு ஏற்றவாறு ஆற்றலும் ஆளுமையுமுள்ள இளைய தலைமுறையினரை உருவாக்க முடியும் கன்பதில் எந்த ஜயப்பாடும் இல்லை.
செல்வராசா-லோஜிதா
2ம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.

.jpg)