கல்வியில் மாணவர் முன்னேற்றத்தை ஏற்படுத்த ஆசிரியர் எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும்.




இன்றைய கல்வி வளர்ச்சி போக்கில் முக்கிய பங்கினை வகிக்கும் இருபங்குதாரர்களாக காணப்படுவர்கள் மாணவர்களும் ஆசியர்களும் தான் என்பது நிச்சயப்படுத்தப்பட்ட விடயமாக கருதக்கடுகின்றது.சமூத்தில் ஒரு பிள்ளை தனது பெற்றோருக்கு அடுத்து அச்சமூகத்தில் இணையும் வலிமையான உறவு தான் ஆசிரியர்கள்.இவ் ஆசிரியர்கள் என்ற அற்புதமான உறவினூடாகவே குழந்தைகளின் எழுச்சி,ஆர்வம்,திறமைகள்,உறுதியான எண்ணங்கள் என்பன தோற்றுவிக்கப்படுகின்றன.அதனால் தான் 'ஹென்றி வேண்யுக்'ஆசிரியர்கள் பற்றி இவ்வாறு குற்ப்பிட்டுள்ளார்.அதாவது 'தனக்கு தானே அரசனாகவும்,மனித சமூகத்திற்கு பணியாளனாகவும்,சேவகனாகவும் ஒருவர் இருப்பாராயின் அவரே ஆசிரியர்'என்கின்றார்.மேலும் எமது முன்னோர்கள் ஆசிரியர்களை பெற்றோர்களுக்கு பிறகும் இறைவனுக்கும் முன்பும் சிறப்பித்து கூறுவதற்கு முதன்மை காரணமே மாணவ சமூகத்தை நற்பிரஜையாக உருவாக்கி எதிர்கால சமூகத்தை வளமானதாக உருவாக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடமே காணப்படுகின்றது என்பதினாலேயே ஆகும்.

அந்தவகையில் மாணவர்களின் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை கையாள வேண்டும் என நோக்குவோமானால் குழந்தைகளின் கல்வியில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ஆசிரியர்கள தான்.அதனால் மாணவனின் கல்வி முறையில் வெற்றியும்,தோல்வியும் அவர்களின் பங்களிப்பிபே பெறுபான்மையானதாக காணப்படுகின்றது.இன்றைய மாணவர்கள் தகவல் தொழினுட்ப அறிவுடனும்,சிங்கள மற்றும் ஆங்கில கல்வியறிவுடன் சமூகத்தில் மிளிரவேண்டியதனால் அவர்களின் நலன்களை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் அதற்கு ஏற்ற வகையில் சிறந்த கல்வி புலமையாளராகவும்,புதியநுட்பங்களை கையாளும் ஆளுமைகளும்,பல் தேர்ச்சியில் திறமையானவராகவும்,சிறந்த வகையில் சல்வி முறையில் பயிற்ச்சி பெற்றவராகவும்,உயிரோட்டமான அறிவுடன் விளங்கி மாணவர்களுக்கு அன்பு,பரிவு,பண்பு மற்றும் நற்பழக்கவழக்கத்துடன் முன்மாதிரியாக திகழ்ந்து சிறந்த முறையிலான கல்வியை வழங்குபவராக ஆசிரியர் காணப்பட வேண்டும்.

மேலும் 'இன்றைய சிறுவர்கள் நாளைய உலகின் தலைவர்கள்'என்பதற்கு இனங்க இன்றைய கல்வி முறையில் ஏட்டுக் கல்வியை மையமாக கொண்டு அமையாமல் அதாவது பரீட்சை பெறுபேற்றை அடிப்படையாக கொண்ட திணிப்பு முறையிலான கற்பித்தலானது மாணவனிடம் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது மாறாக ஒரு மாணவனின் எதிர்கால இலக்கை ஆசிரியர்களே நிர்ணவிப்பவர்களாகின்றார்கள்.எனவே மாணவனிடம் இலை மறைக்காயாக காணப்படுகின்ற ஆளுமையான படைப்பு திறமைகளான (கவிதை,கட்டுரை,பேச்சு திறமைகள்,ஓவியம் தீட்டுதல்,புத்தாக்கச் செயற்பாடுகள்,இசையுடன் கூடிய நடன கலைகள்,அத்துடன் விளையாட்டு திறமைகள்)போன்ற பலவகையான திறமைகளை கண்டறிந்து அவற்றினை முழுமையான வகையில் வெளிக்கொண்டு வருவதன் மூலமே மாணவனிடம் தலைமைத்துவம், விட்டுக்கொடுப்பு, ஒற்றுமை, அனுபவம் என்பவற்றுடன் நல்லொழுக்கம் என்பவற்றை தோற்றுவிக்க முடியும்.

அத்துடன் பொதுவாக மாணவர்கள் சந்திக்கின்ற உளப்பிரச்சினைகளை நோக்குவோமாயின் இணைப்பாட விதாமான செயற்பாட்டில் விருப்பமின்மை,கற்றலில் ஏற்படுகின்ற இடர்பாடுகள்,மனநிலையில் திடீர் மாற்றம்,கோவம்,துக்கம் என பல இயல்புகளுடன் மாணவன் காணப்படலாம்.அத்துடன் மாணவர்கள் பல்வேறுப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து வருபவர்களாகவும்,அவ்வொவ்வருவரின் மனதின் தன்மையும் வேறுப்பட்டதாக காணப்படும் எல்லா மணவர்களின் தன்மையை எல்லாராலும் அறிமுடியாது.எனவே ஆசிரியர் 'பாத்திரத்தின் அளவிற்கேற்ப நீர் ஊற்ற வேண்டும்'என்ற கருத்திற்கு இனங்க மாணவர்களின் மனநிலையை அறிந்து கல்வி புகுட்டுபவராக செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மேலும் தற்போது மாணவ சமூகத்தை அதிகளவு ஈர்த்துள்ள விடயங்களான போதைப்பொருள் பாவனை,அத்துடன் தொழிநுட்ப வளர்சியின் விளைவான தொலைத்தொடர்பு சாதனங்களின் பாவனைகளின் காரணமாக அதிகளவான மாணவர்கள் சமூகத்தில் சீரழிவதினை காணக்கூடியதாக உள்ளது.இதுனூடாக பாடசாலைகளில் உளப்பிரச்சினைகள் ஊற்றெடுக்கின்றன.எனவே வன்முறை சார்ந்த சார்ந்த எதிர்மறையான எண்ணங்களை மாணவர்கள் மனதிலிருந்து துடைத்தெறிய வேண்டுமாயின் ஆசிரியர்களின் விழிப்புணர்வுகளுடன் அன்பான அரவணைப்புடன் கூடிய கற்ப்பித்தல் முறையால் மட்டுமே சாத்தியமாகும்.

எனவே தான் ஆசிரியர்கள் இன்றைய காலத்தில் மாணவர்களுக்கான ஒழுக்கக்கல்வி,அறநெறிக்கல்வி,தொழநுட்பக்கல்வி,சகோதர மொழிக்கல்வி மற்றும் ஆங்கிலக்கல்வி என்பவற்றை சிறு பராயத்திலிருந்தே கற்ப்பிக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி அதனூடாகவே அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதினையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.அத்தோடு பயிற்ச்சியுடன் கூடிய தொழிற்கல்வி மாணவர்களிடையே வழங்கப்பட வேண்டும்.எனவே இவற்றை மையமாக கொண்டே ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடானது முன்னெடுக்கப்பட வேண்டும்

ஆசிரியரானவர் வகுப்பறையில் எல்லா மாணவர்களையும் சமநிலையில் நோக்க வேண்டும்.ஒரு மாணவனுக்கு வழங்குகின்ற சலுகைகள்,உரிமைகள் அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்ச்சமின்றி வழங்கப்பட வேண்டும்.அத்தோடு மாணவர்கள் வகுப்பறையில் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்பவராகவும்,அவற்றிற்கான சந்தர்ப்பத்தை வழங்குபவராகவும் மற்றும் அவர்களின் சிறிய முயற்ச்சிகளையும் பாராட்டும் தன்மை கொண்டவராக ஒரு சிறந்த ஆசிரியர் காணப்படுவார்.

எனவே மாணவன் தனது குடும்ப சூழலில் இருந்து பண்பும் பரிவும் கொள்ளும் ஒரு நபர் என நோக்கும் வகையில் ஆசிரியர்கள் தங்களது பணியை அர்ப்பணம் செய்யவேண்டும்,மாணவரின் எதிர்காலத்துக்கும் தேசியகல்வி கொள்கைக்கும் கலைத்திட்டத்திற்கும் ஏற்ப தனது கல்விநடவடிக்கைகளை மேற்க்கொள்வதன் மூலம் சிறந்த மாணவர்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்பது உலக நியதியாகும்.

கி.சிவரஞ்சினி
2ம் வருடம்
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைகழகம்