இராணுவ பயிற்சியளித்து வந்த ஆமி முகைதீன் தப்பி ஓடமுயற்சித்தபோது துப்பாக்கி பிரயோகம் செய்து மடக்கி பிடிப்பு

-சரவணன்--
ஜ எஸ். ஜ. ஏஸ். ஸஹாரானின் உறுப்பினர்களுக்கு குண்டு பயிற்சியளித்து வந்தவர் தலைமறைவாகிவந்தர் இருந்த வீட்டை சுற்றிவளைத்தபோது அவர் தப்பி ஓடமுயற்சித்தபோது அவரை துப்பாக்கி பிரயோகம் செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் கடந்த 24 ம் திகதி மட்டு கும்புறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கும்புறுமூலை பிரதேசத்தில் தலைமறைகியிருந்த முன்னாள் இராணுவத்தில் கடமையாற்றிய ஒட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் புலனாய்வு பிரிவினர்


வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டமாவடி மீராவேடையைச் சேர்ந்த ஆமிமுகைதீன் என்பவர் ஸஹாரானின் உறுப்பினர்களுக்கு குண்டு தயாரிப்பது மற்றும் இராணு பயிற்சியளித்து வந்துள்ளதாக சிஜடி யினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவரை தேடி வந்ததையடுத்து  அவர் தலைமறைவாகியுள்ளார்


இந்த நிலையில் அவர் கும்புறுமூலை பகுதியிலுள்ள தென்னம் தோட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவதினமான 24 ம் திகதி பிற்பகல் 02.00 மணியளவில் அந்த பகுதியை புலனாய்வு பிரிவு மற்றும் சிஜடி யினர் சுற்றி வளைத்து தேடுதல் மேற் கொண்ட போது அவர் அங்கிருந்து தப்பியோட முற்பட்டபோது


புலனாய்வு பிரிவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை மடக்கி பிடித்து கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். செய்திகளை உடனுக்குடன்  பேஸ்புக் ஊடாக தெரிந்துகொள்ள எமது பேஸ்புக்  பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள்   
https://www.facebook.com/battinews
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்