முன்பள்ளி ஆசிரியர் வகிபாகம் !


கு.மீனா
கல்வியியற் சிறப்புக்கற்கை
கிழக்குப் பல்கலைக்கழகம்
வந்தாறுமூலை.

குழந்தைகள் குறுநடுடையிடும் கல்வி முன்பருவக்கல்வி எனப்படும். இக் கல்வி Nursery, preschool எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்வகையில் 3 வயது தொடக்கம் 6 வயது வரையான காலப்பகுதியில் முன்பருவக் கல்வியையை பயில்கின்றனர். இப் பருவத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும் அனுபவங்களே அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு ஊன்றுகோலாகின்றது என்றால் அது மிகையாகாது. 

இக்கல்வி தொடர்பாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிளேட்டோ என்ற அறிஞர் அதன் தாற்பரியங்களை நன்கு உள்ளனர் . அதன் பின் வந்த பல்வேறு அறிஞர்ளும் அக் கல்வியின் முக்கியத்துவத்தையும் குறிக்கோளையும் விபரித்துள்ளனர். இப்பருவத்திற்கு உகந்த  அனுபவக்கல்வியை அளிப்பது ஆசிரியர்களின் முக்கிய செயற்பாடாக காணப்படுகின்றது. 

இவ்வகையில் ஒரு வழிகாட்டியாகவும் உதவி செய்பவராகவும் இருப்பவரே ஆசிரியர் ஆவார். முன்பருவக்கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் எனும் தனிப்பிரிவினர் அவசியமில்லை  எனும் கருத்து நிலவினாலும் முன் கல்வி
பயிலும் மாணவரக்ளுக்கு ஆசிரியர் வகிபாகம் முக்கியமானதொன்றாகவே காணப்படுகின்றது. கல்வி எனும் கோபுரத்திற்கு அடித்தளமாக அமைவது முன் பருவக்கல்வி என்பது மறுப்பதற்கில்லை. சரியான அடித்தளம் இல்லாத கட்டடம் அவ்வப்போது பாதிப்புக்குள்ளாவதைப்போன்று சரியான

முன்பருவக்கல்வி யை பெற்றுக்கொள்ளாத பிள்ளைகள் தமது அன்றாட கற்கை நெறிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். ஒரு குழந்தையை நாம் விரும்பும் விதம் மாற்ற வேண்டுமாயின் இப்பருவத்தில் தான் இது சாத்தியப்படும். ஆகவே தான் இப்பருவம் 'நெகிழ்வடைப்பருவம்' எனப்படுகின்றது. மேலும் இதனை 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' எனும் பழமொழியும் எடுத்தியம்புகின்றது. பள்ளி முன்பருவக்கல்வியின் தாற்பரியங்களை  4 பிரிவுகளாக பிரித்து நோக்க கூடியதாக உள்ளது. 

அவ்வகையில் முதலாவது குழந்தையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்  இரண்டாவது சிறுவர்களிடத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்தல் மூன்றாவது குறிக்கோள் நான்காவது குழந்தையின் முழு வளர்ச்சியை ஊக்குவித்தல், என்பனவாகும். இவை நான்கும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. இவ் முன்பருவக்கல்வியின் பரியங்களை மாணவர்களிடத்தே ஏற்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு அளப்பெரியதாக காணப்படுகின்றது. ஒரு குழந்தை தன் குடும்பத்தை அடுத்து பாடசாலையிலே அதிக நேரத்தை செலவிடுகின்றது. எனவே முன்பள்ளி ஆசிரியரின் பாசமானது ஒவ்வொரு குழந்தைக்கும். அவசியமானதாக காணப்படுகின்றது.

பொதுவாக முன்பள்ளி ஆசிரியர்கள் பெண்களாகக் காணப்படக் காரணம் அவர்களால் தாய்க்கு நிகராக அன்பு செலுத்தி கல்வியை புகட்டக் கூடியவர்களாக காணப்பட வேண்டும் என்பதேயாகும். இவர்களின் வகிபாகத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக கற்பித்தல் சந்தர்ப்பங்கள், பயன்படுத்தும் உபகரணங்கள், அவற்றின் தன்மைகள் படிமுறைகள் என்பவற்றை குறிப்பிட முடியும். 

மேலும் இவ் முன்பள்ளி ஆசிரியர்கள்  ஆக்க ரீதியான சிந்தனை உடையவர்களாக காணப்படல்  வேண்டும். அதாவது ஒன்றைச் செய்ய முன்பு அது எந்த மட்டத்தில் அமைய வேண்டுமென்ற கற்பனை வடிவம் அவரது மனதில் உருவாக வேண்டும். இதுவரை தன் கண்களால் கண்டிராத பிள்ளையை மனதில் எண்ணி அப்பிள்ளைக்காக சில திட்டங்களை இடுபவராகவும் தன்னை பொருட்படுத்தாத பிள்ளைகளை கூட விருப்பமுள்ள கருமங்களில் ஊக்குவிக்கும், வழிகாட்டும் நிலையில் அவ்வாசிரியர்கள் காணப்பட வேண்டும்.

குழந்தைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி அழகான, இளமையான, நன்றாக உடையணியும் சிரித்த முகத்துடன் பழகும் ஆசிரியர்களையே விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது . எனவே ஒவ்வொரு முன்பள்ளி ஆசிரியரக்ளும் நேர்த்தியாக முழுமையாக உடையணிந்து பிள்ளை விரும்பும் ஒழுங்கு முறையுடையவராகவும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும ; வெளிக்காட்டுபவராகவும் உயர்ந்த பண்புடையவராகவும் அதனை தனது பேச்சிலும் சிரிப்பிலும் பார்வையிலும் விளிப்பிலும்
வாழ்த்துதலிலும் என ஒவ்வொரு நடத்தையிலும் வெளிப்படுத்துபவராகவும் காணப்படல் வேண்டும். 
ஓர் முன்பள்ளி ஆசிரியர் ஓர்பிள்ளையை சினந்து பேசும் போது அப்பிள்ளை அடுத்த நாள் பாடசாலை செல்வதை விரும்பாது எனவே ஆசிரியரின் பங்கு முக்கியமானதாக காணப்படுகின்றது. தாய்க்கு ஒப்பாக அல்லது அதற்கு அடுத்த படியாக பிள்ளைக்கு முன்பள்ளிப் பருவ ஆசிரியர்கள் காணப்படல் வேண்டும். தாய்க்கு குழந்தை வழங்கும் மதிப்பை, கௌரவத்தை, நெருக்கத்தை, அன்னியோன்னியத்தை இயல்பாகவே பிள்ளை வெளிக்காட்டும் நிலைக்கு இட்டுச் செல்பவர்களாக இவ்வாசிரியர்கள் காணப்பட வேண்டும். 

குழந்தையின் முழு வளர்ச்சிதான் பள்ளி முன்பருவக்கல்வியின் குறிக்கோளாக அமைய வேண்டுமென்பதைப் புரிந்து ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டியவர்களாக காணப்படுகின்றனர். மேலும் முன்பள்ளிப் பருவப் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் எந்தவொரு முறைசார் கல்வியையும் கற்று இருக்கவில்லை என்பதனை உணர்ந்து எவ்வித நோக்கமும் இன்றி ஓடும், பாயும், சிரிக்கும் நிலையில் காணப்படும் பிள்ளைகளை ஒரே நேரத்தில் ஒன்றுபடுத்தி அனுசரித்து பல வழிமுறைகளைக் கையாண்டு ஊக்கப்படுத்தி ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏற்ற விதத்தில்

கல்வியை கவர்ச்சிகரமாக புகட்டுபவராக காணப்பட வேண்டும். அவ்வகையில் சூழலுடன் இணைந்ததாக அவர்களின் பிரசச்னைகளைப் போக்கி எவ்வித குறைபாடுமின்றி பூரணமாக பிள்ளையின் எதிர்பார்ப்பை முனைப்பாக்குவதற்கு  ஏற்றாற்போல கற்றல் உபகரணங்கள் எப்போதும் மிக அழகாகவும் கண்கவரும் விதமாகவும் நேரத்தியாகவும் காணப்பட வேண்டும்.

பிள்ளையை ஒரு சுதந்திரப் பிரஜையாக்கும் இலக்கை மனதில் கொண்டு கருமமாற்றும் ஆசிரியராக எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ் முன்பள்ளி ஆசிரியரக்ள் பிள்ளைகளின் உடலைச்சுத்தம் செய்து உணவூட்டி விடுகின்ற வேலையாட்கள் அல்லாமல் பிள்ளைகளை சுதந்திரமாக அவ்
வேலைகளை செய்து கொள்ளும் நிலையை உருவாக்குபவர்களாகவும் தனக்காக தானே சிந்தித்துதமது பிள்ளைகளை வழிநடத்துபவர்களாகவும் காணப்பட வேண்டும். 

பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுத்து பிள்ளைகளுக்காக தானே சிந்தித்து செயலாற்றி முன்பள்ளியில் வந்து சேர்ந்த அதே அடைவுமட்டத்தில் பிள்ளைகளை வெளியேற்றக்கூடாது என்பதை முன்பள்ளி ஆசிரியர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். பள்ளி முன்பருவக்கல் வியில் ஏற்றுக்கொள்ளும் விடயங்களே அப்பிள்ளையின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக காணப்படும். 

பிள்ளையின் இயல்பின் இரகசியத்தை ஊடுருவிபப்பார்த்து அவரக்ளின் வாழ்க்கைத் தகவல்களை அறிந்து தமது விருப்பு வெறுப்புக்கு அப்பால் நின்று பிள்ளை மீது ஓர் ஆசிரியர் அன்பு செலுத்துவாராயின் அவ்வாசிரியர் உயர் பண்புடையவராக காணப்படுவார். பிள்ளைகளின் ஆர்வங்களை மெருகூட்டி பொருட்களுடன் நடைமுறை பயிற்சிகளை முன்வைக்கும் தன்மை உடையவர்களாக இவ்வாசிரியர்கள் காணப்பட வேண்டும். இவர்கள்  செய்யும் சிறு தவறும் கூடப் பாரிய பிரச்சனைக்கு வழிகோலும் சிறுவயதில் குறும்புக்கார பையனை ஆசிரியர்கள் பாராட்டுவதும் அத்தகைய தவறாகவே கொள்ளப்படுகின்றது. 

எதிர்காலத்தில் அப்பிள்ளை பெரிய தவறைப் புரியவும் இப்பாராட்டு அடிப்படையாக அமைந்து  விடலாம். அத்துடன் ஒரு பிள்ளை ஒரு பிரச்சனையை எதிர்கொண்டிருப்பது தெரிந்தால் அதிலிருந்து விடுபடும் வழியைக்காட்ட வேண்டும் இல்லையேல் அப்பிள்ளையின் அறிவு மழுங்கி விடக்கூடும். மேலும் ஒரு பிள்ளை ஒரு கருமத்துடன் ஈடுபட்டு முடிவடைந்து விட்டால் அப் பிள்ளையை இன்னொரு பொருளுடன் இன்னொரு கருமத்தில்
ஈடுபடுத்துவது ஆசிரியரது கடமையாக காணப்படவேண்டும்.

அது மாத்திரமன்றி அவர்கள் ஒவ்வொரு கருமத்தையும் ஆற்றி முடிக்கும் போது நல்ல அழகாக இருக்கிறது, கெட்டிக்காரன், கெட்டிக்காரி' போன்ற மகிழ்விக்ககூடியதான வார்த்தைப் பிரயோகங்களை மேற்க்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அடுத்த கருமத்தை இன்னும் ஊக்கத்துடன் செய்வதற்கு அப்பிள்ளை தயார்செய்யப்படுகின்றது. மேலும் ஆசிரியர்கள்  எளிமையான தெளிவான மொழியினைப் பேசுதல் வேண்டும். ஏனெனில்

குழந்தைகள் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொள்கின்றார்கள். ஆசிரியர்கள் குழந்தைகளுடன் பேசும் போது அவசரமாகப் பேசக்கூடாது அது குழந்தைகள் கற்பதற்கும் சிரமத்தைக் கொடுக்கும் என்று இந்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் குறிப்பிடுகின்றார். பிள்ளை விருத்தி தொடர்பாக நிகழும் மாற்றம் பற்றிய தொடர் அவதானம் முன்பள்ளி ஆசிரியரிடம் காணப்பட வேண்டும். 

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களில் பிள்ளைகள் தொடரப்பாகவும் நவீன கற்றல், கற்பித்தல், அணுகுமுறைகள் தொடர்பாகவும் வரும் பல ஆக்கங்களை நிகழ்ச்சிகளை கேட்டும் பார்த்தும் வாசித்தும் பல புதிய விடயங்களை தாம் கற்றுத் தன் திறமைகளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.