சமூக அபிவிருத்தியின் முன்னோடியாகவும், அபிவிருத்தியின் சக்தியாகவும், ஊடகமாகவும், தலைமைத்துவம் பெறுபவராகவும் ஆசிரியர் காணப்படுகின்றார். கற்பித்தல் தொகுதிகளை திட்டமிட்டு செயற்படுத்துவதில் ஆசிரியர் முக்கிய இடம் பெறுகின்றார். இங்கு பிள்ளைகளின் சிந்தனையை தூண்டுதலும், கல்வி மூலவளங்களை ஒன்று சேர்த்தலும் முக்கிய இடம் பெறுகிறது. பிள்ளைகளின் பல்வேறு தேவைகளை
கற்பித்தலின் நோக்கங்களுக்கு ஏற்புடையதாக்கும் நோக்குடன் முழுக் கல்விச் சூழலையும் ஒன்றினைத்தல் ஆசிரியரின் கடமையாகும்.
ஆசிரியர் செயற்படும் பத்து சந்தர்ப்பங்கள் பின்வருமாறு:
1. மாணவர்களை செயலாக்கத்துக்கு தூண்டுதல்.
2. கல்விச் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகளை அளித்தல்.
3. பல்வேறு தேவைகளை இயக்குதல்
4. முன்மாதிரியாக செயற்படல்
5. வளங்களை தொடர்புபடுத்தல்
6. திட்டம் வகுத்தல்
7. அபிவிருத்திக்கு உதவுதல்
8. மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை தூண்டுதல்
9. ஒழுங்கு படுத்தல்
10. மாணவர்களை சரியான வழியில் நடத்துதல்
இவ்வாறு ஆசிரியரின் பங்களிப்பு பற்றி நோக்கலாம். ஆகவே ஆசிரியரின் பாட அறிவு மட்டும் போதுமானதல்ல. ஆசிரியர் மாணவரின் தன்மைக் கேற்ப பாட விடயங்களுக்கு கலாசார கல்வி வடிவத்தை கொடுத்தல் வேண்டும்.
ஆசிரியரின் கடமைகளை இரு வகைப்படுத்தலாம்.
1. பாடசாலையில் செய்யும் கருமங்கள்
2. பாடசாலைக்கு வெளியே செய்யும் கருமங்கள்
ஆசிரியர் பாடசாலையில் செய்யும் கருமங்களாக, ஆசிரியர் ஊக்குவிக்கும் ஒருவராக செயல்படுகிறார். இதில் ஆசிரியர் மாணவனின் இயல்புகளை அறிகிறார், கற்றலை வளர்ப்பவராக செயல்படுகிறார், பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு எப்போதும் உதவி செய்பவராக இருப்பார்.
அவ்வாறே ஆசிரியர் பிள்ளையின் வளர்ச்சியிலும் அவதானமாக இருப்பார். பிள்ளையின் உடல், உள வளர்ச்சியில் ஏதும் தடைகள் இருப்பின் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை வழங்குவார். கற்றல் கற்பித்தல் முறைகளை உருவாக்கும் சிற்பியாகவும் செயற்படுவார். ஆசிரியர் எப்போதும் புதிய அறிவினை தேடுபவராகவும், ஆய்வாளராகவும் செயற்படுவதோடு சிறந்த வைத்தியராகவும், நிருவாகியாகவும் செயற்படுவார். ஆசிரியர் சிறந்த நிருவாகியாக இருக்க வேண்டும் என்பது இக்கால முக்கிய தேவையாகும்.

பாடசாலையின் நிர்வாகம் அதிபருக்கு மட்டும் பொறுப்பான ஒன்றல்ல. எல்லா ஆசியர்களுக்கும் குறிப்பிட்ட அளவு வகுப்பறை நிருவாகம் ஒப்படைக்கப்படும். வகுப்பறை அல்லது பாடசாலை அல்லது சிலவேளை பாடசாலைக்கு வெளியேயும் நிருவாக பொறுப்புக்களை ஆசிரியர் ஏற்க வேண்டி வரும்.
ஆசிரியர் நிறைவு செய்ய வேண்டிய நிருவாக கடமைகளை ஏழு வகையாக வகுத்து நோக்கலாம்.
1. பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை வளர்த்தல் :-
பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புதலும் பாடசாலையிலிருந்து வெளியாகும் பிள்ளைகளை ஏற்பதும் சமூகமாகும். ஆகவே பாடசாலை ஆசிரியர் சமூகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களின் தன்மைகளையும் கருத்துக்களையும் பற்றி தெளிவாக கருத்துக்களை பெற்றிருத்தல் வேண்டும்.
2. கற்பித்தலுக்கு ஏற்ற முறையில் பாடத்தை திட்டமிடல் :-
சமூக தேவைகளுக்கு ஏற்கக்கூடிய கல்வித்திட்டம் ஒன்றை ஆசிரியர் மாணவர்களுக்கு அளித்தல் வேண்டும். அது தொடர்பான கற்பித்தல் முறைகள், தேவையான உபகரணங்களை தீமானிப்பதும் ஆசிரியரே ஆகும்.
3. மாணவர்கள் தொடர்பான பிரச்சினைகள் :-
புதிய மாணவர்களை சேர்த்தல், வகுப்பேற்றப் பரீட்சைகள், மாணவர் ஒழுக்கத்தைப் பேணல், மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்தல் என்பன இதில் அடங்கும்.
4. ஆசிரியர் குழு, ஏனைய ஊழியர்கள் தொடர்பான கருமங்கள் :-
சகல ஆசிரியர்களாலும் தம் சகோதர ஆசிரியர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் பல உண்டு.
5. பௌதீக வசதிகள் :-
மாணவர்களின் கற்றல், விளையாட்டு, சுகாதாரமும் உடல் நலமும் என்பன தொடர்பான வசதிகளை செய்து கொடுக்க முயற்சித்தல்.
6. நிதியுடன் தொடர்பான நிருவாகம் :-
பாடசாலையில் சில கருமங்களுக்காக நிதி சேகரிப்பு, செலவழித்தல் போன்றவற்றில் முறையாக செயல்படல்.
7. ஒழுங்குபடுத்துதலும் அமைப்பும் :-
பாடசாலை ஒரு ஒழுங்கு முறைப்படி செயற்பட வேண்டும். அதற்கு ஆசிரியரின் உதவி முக்கியமாகும்.

அடுத்து ஒரு ஆசிரியரது பாடசாலைக்கு வெளியேயுள்ள கடமைகளைப் பார்ப்போம்.
நற்பிரஜைகளை உருவாக்குவது ஆசிரியரின் கடமையாததால் எத்தகைய நற்பிரஜையை உருவாக்க வேண்டும் என்பதை தேடிப்பார்க்கும் உரிமை ஆசிரியருக்கு உண்டு. அப்போது சமுதாய நிலையை பரிசீலிக்கவும், சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளவும் வேண்டி ஏற்படும். மேலும் மாணவர்களை சமூகமயமாக்கும் பொறுப்பு ஆசிரியருடையதாததால் சமுதாயத்தொடர்பு ஏற்பட வேண்டியதும் அவசியமாகும். சமூக உரிமைகளை பாதுகாத்து, சமூகத்தை வளர்த்து மாற்றங்களை படிமுறைகளாக ஏற்படுத்தி அம்மாற்றங்களை ஏற்கக்கூடிய ஒரு கட்டத்தை உருவாக்குவது ஆசிரியரது பொறுப்பாகும். சமூக அபிவிருத்தியை எற்படுத்துவதும் ஆசிரியரது கடமையாகும். இவ்வாறு கற்பிக்கும் ஆசிரியரது சேவை பல்வகைப்படும். ஆரம்பக் கைத்தொழில்சமுதாயத்தில் ஆசிரியர் சமுதாய விழுமியங்களை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மாற்றும் பணியைச் செய்தார். கைத்தொழில் சமுதாயத்தில் அடிப்படையாக பிள்ளைகளை ஒரு தொழிக்கு தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆசிரியரின் பிரதான பொறுப்புக்களாக பின்வருவன காணப்படுகின்றன.
கற்பித்தல் -
ஆசிரியரால் பிள்ளையின் திறமைக்கும் தேவைக்கும் ஏற்ப குறித்த அளவு அறிவும் திறன்களும் அளிக்கப்படும். இவ்வாறு ஒரு ஆலோசகராக கடமையாற்றவது அவரது முக்கிய கடமையாகும்.
சமூகமயமாக்கல் -
ஆசிரியர் ஒரு பிள்ளையை தான்வாழும் சமுதாயத்திற்கு ஏற்புடையதாக மாற்றுகிறார். இங்கு சமூகத்தின் விழுமியங்களும் பெறுமானங்களும் கற்பிக்கப்படும் இவ்விடத்தில் ஆசிரியர் ஒரு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
மதிப்பீடு -
இறுதியாக பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய சமூக, தொழில் தொடர்பான விவேகம், திறன்கள் என்பனவற்றில் உள்ள வேறுபாடுகளை ஆசிரியர் எடுத்துக்காட்டுவார். இதில் ஆசிரியர் ஒரு நீதிபதியாக கடமையாற்றுவார். அத்துடன் மாணவர்களை கற்றலுக்கு தூண்டுதல், அவர்களைக் கட்டுப்படுத்தல், கற்றலுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தல் போன்றவற்றையும் குறிப்பிட முடியும்.
ஆசிரியர் நிறைவேற்றும் முக்கிய துணைக் கருமங்கள் சில பின்வருமாறு
சமூகத்தின் ஒரு பிரதிநிதி –
நல்லொழுக்கங்களை வளர்க்கின்றார்.
ஆசிரியர் ஒரு நீதிபதி –
புள்ளிகள், பெறுமானங்களை வழங்குகிறார். அறிவு, திறன்களை விருத்தி செய்பவர்
உதவியாளர் -
மாணவர் பிரச்சினைகளில் ஒரு வழிகாட்டி, உதவியாளர்.
தீர்மானிப்பவர் -
பிள்ளைகளிடையே பிரச்சினைகளைத் தீர்த்தல்.
துப்பறிவாளர் -
பாடசாலைச்சட்டங்களை மீறுவோரை கண்டுகொள்ளல்.
முன்மாதிரியாளர் -
பிள்ளைகள் பின்பற்றக்கூடிய விசேட இலச்சணங்களை கொண்டிருத்தல்.
பதகளிப்பை மட்டுப்படுத்துபவர் -
தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவுபவர்.
தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் -
பிள்ளைகளுக்கு தன்னை பற்றிய நம்பிக்கை ஏற்பட உதவுதல்.
குழுத்தலைவன் -
குழுவின் சூழலை உருவாக்குதல். பெற்றோருக்கு பதிலாக கடமையாற்றுபவர்.
எதிர்ப்புக்கள் தொடர்பான இலக்குக்குறியவர் -
முதியோர்களினால் ஏற்படுத்தப்படும் மன முறிவுகளால் ஏற்படும் வன்செயலீடுபாட்டிற்கு ஒரு இலக்காக செயற்படல்.
நண்பன், ரகசியங்களை பாதுகாப்பவனும் -
பிள்ளைகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்பவர்.
இரசணை நோக்கு –
பிள்ளைகளின் உளத்தேவைகளை பூர்த்தி செய்தல்.
இவ்வாறாக ஆசிரியர் மாணவர்களின் ஆலோசகராக, அறிவைப் பெற்றுக்கொடுப்பவராக, அவர்களது நடத்தைகளை மதிப்பிடல். பெறுமானங்களை நிர்ணயித்தல், ஒழுக்கம் தொடர்பான ஆலோசகர், கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பாளர், நண்பர், போஷகர் என பல்நிலைகளில் கடமையாற்றுவார். வகுப்பறைக்கு வரும் ஆசிரியர் பொதுவாக வகுப்பைப் பற்றியும் தனியாள் பற்றியும் அறிந்து தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்வார். மாணவர்களின் பெற்றோர் பற்றியும் அவர்கள் அறிந்து கொள்ளவதால் ஆசிரியரின் கடமை இலகுவாகின்றது. இவ்வாறாக சமூக மனப்பான்மைகளை நிறைவு செய்யும் வகையில் இத்தகைய பங்களிப்புக்களை செய்யக்கூடிய ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
வினோத் விதுர்சனா,
கல்வியியல் மற்றும் பிள்ளைநலத்துறை,
இரண்டாம் வருடம் (சிறப்புக்கற்கை),
கிழக்குப்பல்கலைக்கழகம், வந்தாறுமூலை.