பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற த.தே கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரம்

(டிக்க்ஷித்)
பொத்துவில் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம்  நேற்று(29) பொத்துவில் பிரதேச சபை பதில் தவிசாளர் பெருமாள் பார்த்திபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.




இதன் போது உரையாற்றிய திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் இரண்டாம் இலக்க வேட்பாளர் இரா.சயனொளிபவன், அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்க பல அரச சார்பான கட்சிகள் சுயேச்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் இவ் விடயத்தில் மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றார் .  இருப்பை தக்க வைக்க தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்.

இந் நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.