திருவெம்பாவை விரதம் இம்முறை இன்று 21ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி திருவாதிரையுடன் நிறைவடைகிறது.
இக்காலப்பகுதியில் இந்துக்கள் வாழ்கின்றபகுதிகளில் அதிகாலை திருப்பள்ளியெழுச்சி ஊர்வலம் நடைபெறுவது வழமையாகும். ஆனால் இம்முறை கொரோனா காரணமாக அதனை நடாத்தமுடியாத நிலையெழுந்துள்ளது.
ஊர்வலத்தை தவிர்த்து ஆலயங்களில் அதிகாலை பூஜை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார முறைப்படி நடாத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
காரைதீவு திருப்பள்ளி எழுச்சி ஊர்வலம் இம்முறை இடம்பெறாது.
காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரால் பல வருடங்களாக சிறப்பான முறையில் இடம்பெற்று வந்த திருப்பள்ளிஎழுச்சி ஊர்வலம் இம்முறை நாட்டின் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை (கொரோனா) காரணமாக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இடம்பெறுமா இல்லையா என்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 12.12.2020ம் திகதி காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரின் ஏற்பாட்டில் காரைதீவு அனைத்து ஆலய நிர்வாக தலைவர்கள் கலந்து கொள்ளலுடன் இடம்பெற்றது.