தேசிய சேமிப்பு வங்கியின் 49வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தம்பிலுவில் கிளை ஏற்பாடு செய்த விசேட பூஜை நிகழ்வு

 

தேசிய சேமிப்பு வங்கியின் 49ஆண்டு நிறைவினை முன்னிட்டு  தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில்  விசேட பூஜை நிகழ்வு ஒன்று வங்கி முகாமையாளர் திரு எஸ். கிரிஷாந்த் தலைமையில் 16.03.2020 இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அதிதியாக ஒய்வு நிலை முகாமையாளர் K. விவேகானந்தராசா மற்றும் தம்பிலுவில் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் திரு கே. கெளரிதீபன் ஆகியோரும் பெண்கள் குழுக்களின் உறுப்பினர்களும்  மற்றும் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள்,  வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.