துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது .

சமூக சேவைகள் செய்துவரும் விழுதுகள் அமைப்பின் நிதியில் வற்றிநியூஸ்  ஸ்தாபகர் இரா.சயனொளிபவன் ஊடாக 
தாயின் பராமரிப்பில் வாழும்  தாண்டியடியை சேர்ந்த மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது .  

குறித்த மாணவி வீட்டிலிருந்து நீண்ட தூரம் நடந்தே  பாடசாலைக்கு சென்று வந்தவர் .  

விழுதுகள் அமைப்பானது கடந்த வருடம் கொரோனா காலத்திலும் திருக்கோவில் பிரதேசத்தில் நிவாரண பணிகளை செய்து வந்துள்ளது. மேலும் இவ் வருடம் க.பொ.த சாதாரண தர , உயர்தர பரீட்சை எழுத இருக்கும்  மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வகுப்புக்கள் நடாத்தவும் உள்ளனர்