மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி ! இருவரது சடலமும் இன்று மீட்பு


(க.ருத்திரன்)
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நேற்று  தைப்பொங்கல் தினத்தன்று  நண்பர்களுடன் குளிக்கச் சென்று   காணமல் போன சிறுவர்கள் இருவரினதும் சடலம் மீட்கப்பட்டுள்ளது . 


பிரதான வீதி கிரானைச் சேர்ந்த ஜீ.சிவானந்தன் வயது (16). பாடசாலை வீதி கிரானைச் சேர்ந்த ச.அக்சயன் வயது (16) ஆகியோரே  கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர் 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 
பொங்கல் தினமன்று கிரான் தேசிய பாடசாலையில் ஓரே வகுப்பில் கல்வி பயிலும் 07 பேர் நண்பகல் வேளை அருகிலுள்ள கடற்கரைக்கு சென்று குளித்துள்ளனர். இருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர் .
ஒருவர் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளார்.

கடலில் காணமல் போனவரை தேடும் பணியில் கடல் உயிர் பாதுகாப்பு பாடையினர் கல்குடா சுழியோடிகள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டனர் .
 இன்று காலை ஒருவரது சடலமும் மாலை வேலை மற்றையவரின் சடலமும் மீட்கப்பட்டது 

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் கிரான் பிரதேச மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.