பாதுகாப்பு படைகளின் வருடாந்த பிரித் பாராயணம்


பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த பிரித் பாராயண நிகழ்வு நேற்று (26) தொடக்கம் இன்று (27) காலை வேளை வரையில் நாட்டின் பல்பேறு பாகங்களிலுமுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிக்குகளின் பங்கேற்புடன் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

 2008 ஆம் ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இலங்கையின் தற்போதைய கௌரவ பிரதமரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய தற்போதைய ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 2008 ஆம் ஆண்டில் மேற்கண்டவாறான ஆசிர்வாத பூஜைகள் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் . 

பல வருடங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த மேற்படி பிரித் பாராயண நிகழ்வுகள் கொரோன வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கடந்த சில வருடங்கள் நடத்தப்படாமல் இருந்ததோடு, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் தற்போதைய ஆட்சிக்காலத்தில் மீண்டும் பிரித் பாராயண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உரிய சுகாதார பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி போரில் உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களின் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் அதிமேதகு ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோருடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்களில் கலந்துகொண்டிருந்தனர்.

 இதன்போது முப்படையினர், பொலிஸார் , நாடு மற்றும் நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் நீங்கி தேசத்திற்கு ஏற்பட்டுள்ள அனைத்து பின்னடைவுகளும் மறைந்து நாடு செழிப்பான நிலைமையை அடைய வேண்டுமென ஆசி வேண்டும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன..