கொக்கட்டிச்சோலையில் தமிழகரம் இணைய வானொலியின் 'தமிழரகம் விருது – 2021'

(சித்தா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் மண்ணில் தமிழகரம் இணைய வானொலி நடாத்தும் மாபெரும் பேச்சுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் கவிஞர் மேரா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா – கனகசூரியம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான திரு.மூ.உதயகுமார், திரு.த.அருள்ராசா, திரு.க.முருகேசபிள்ளை, உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.க.குணசேகரம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு 2021இற்கான தமிழரகம் விருது வழங்கும் விழாவினைச் சிறப்பித்தனர்.

இவ் விருது வழங்கும் விழாவில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் யோகதீபன் - ஜதுசினி பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று 2021 ஆம் ஆண்டுக்கான தமிழரகம் விருதையும், ரூபாய் 25000 பணப் பரிசையையும் தனதாக்கியுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் இம் மாணவிக்கு ஆலோசனை வழங்கிய வித்தியாலய அதிபர் திரு.நா.இராமேஸ்வரன், வழிப்படுத்திய ஆசிரியர் சுதர்ஜினி ஆகியோரை பாடசாலைக் கல்விச் சமூகம் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.