ஓய்வு பெற்ற விவசாய பாட ஆசிரியர் சீனித்தம்பி – நடேசன் காலமானார்.

(சித்தா)

வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் விவசாயம் பாடம் கற்பித்து விவசாயத்துறையில் ஓர் புரட்சியை ஏற்படுத்தியதுடன் மாணவர்களுக்கு உடல், உள, ஆன்மீக விருத்திச் செயற்பாடுகளை  மேம்படுத்துவதிலும் முன்னிலை வகித்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனித்தம்பி – நடேசன் (16.07.2022) காலமானார்.

இவர் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாத்திரமன்றி அம்பிளாந்துரை கலைமகள் வித்தியாலயம், களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயம், தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயம், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து சிறந்த ஆசிரியர் எனும் நாமத்துடன் இன்றும் கல்விச் சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.