நாட்டில் இதுவரை குரங்குக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை: சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம்!


நாட்டில் இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எவரும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு இந்நோய் பற்றி தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு குரங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.