போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது ! ஓட்டமாவடியில் சம்பவம்


போதை மாத்திரைகளுடன் 41 வயதுடைய சந்தேக நபரொருவர் ஓட்டமாவடி மாவடிச்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 1,100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.