மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் காலமானார்

(சித்தா)
மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் இன்று (01.12.2022) அதிகாலை  சுகவீனம் காரணமாக காலமானார். இவர் 1963 ஆண்டு பிறந்தவராகும். இளமையில் இருந்தே பக்தி வாழ்க்கை வாழ்ந்த சிறந்த சேவையாளன் 

சமாதான நீதவான்,இணக்கசபை உறுப்பினர், தலைவர் திருநீற்றுக் கேணி சிவசக்தி ஸ்ரீமுருகன் ஆலயம், களுதாவளை போன்ற கௌரவ பதவிகளை  வகித்தவர். ஆலயம்,அறநெறிசார் சேவைகள்,சமூகம்சார் பணிகளில் முன்னின்று உழைத்தவர். அன்னாரின் இறுதிக் கிரியை எதிர்வரும் 04.12.2022 ஆம் திகதி நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.