தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத்தில் (08.12.2022 - 23.30) மணிக்கு வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு (23.30) ஒரு சூறாவளியாக தீவிரமடைந்து உள்ளது.
இது தற்போது திருகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்காக 370km தூரத்திலும் , யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்காக 550km தூரத்திலும் , காரைக்காலில் இருந்து தென்கிழக்காக 560km தூரத்திலும், சென்னையிலிருந்து தென்கிழக்காக 640km தூரத்திலும் தற்போது மையம் கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர பிரதேசத்தின் புதுச்சேரிக்கும் சிவஹரிகோட்டாவிற்கும் இடையே எதிர்வரும் 09ஆம் திகதி இரவு
65km/h - 75km/h வேகத்தில் வீசும் காற்றுடன் இப்பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
க.சூரிய குமாரன்
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.



.jpeg)

.jpg)




.jpeg)
.jpg)


