உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டை அமுல்படுத்தாதீர்கள் ; மனித உரிமைகள் ஆணைக்குழு !


உயர்தர பரீட்சைகள் நடைபெறும் ஜனவரி 23, 2023 முதல் பெப்ரவரி 17, 2023 வரை மின்வெட்டுகளை எந்த நேரத்திலும் திட்டமிடுவதைத் தவிர்க்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு (HRC) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.

இதன் மூலம் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் தங்களது கல்வி உரிமையை தடையின்றி பயன்படுத்த முடியும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் நிலவும் மின்வெட்டு அட்டவணை குறித்த அண்மைக்காலச் செய்திகளைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது.