அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான தீர்மானம்!

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இந்து புத்தாண்டை முன்னிட்டு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.