மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழப்பு


நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மாட்டு வண்டியுடன் மோதுண்டதில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (15.04.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர் - சாய்ந்தமருது வேப்பையடி சேர்ந்த 35 வயதுடைய ஜமால்டின் ஹாரூன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடும் வேகம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபருடைய சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்