திருகோணமலையில் கஜேந்திரன் மீது தாக்குதல் : 6 பேர் கைது!



யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபன் நினைவு தின ஊர்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சீனக்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தாக்டகுதல் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது.