மட்டக்களப்பு கோட்டமுனை புற்தரை விளையாட்டு மைதான முற்பதிவுகள் இரு மாதங்களுக்கு இடைநிறுத்தம்.

மட்டக்களப்பு  கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் சர்வதேச தரம் வாய்ந்த ஆடுகளத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதனால் எதிர்வரும் கார்த்திகை, மார்கழி  மாதங்களில் எந்தவிதமான கிரிக்கட் போட்டிகளுக்குமான முற் பதிவுகள் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த செயற்பாடுகள் முடிவடைந்ததும் வெளிநாட்டு பாடசாலை போட்டிகளும் உள்ளூர் போட்டிகளும் மற்றும் தேசிய போட்டிகளும் நடைபெற இருக்கின்றது என்பதையும் அறியத்தருகின்றோம்.

கோட்டைமுனை விளையாட்டு கிராம நிர்வாகம்.