சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய சதங்களை பதிவு செய்த வீரராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி சாதனை படைத்துள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துடனான முதலாவது அரையிறுதி போட்டியிலேயே அவர் இந்த மைல் கல்லை எட்டினார்.
இதற்கமைய, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிகூடிய சதங்களை பெற்ற வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்திருந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவுடனான தகுதிகாண் போட்டியில் தனது 49 ஆவது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோஹ்லி, சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை சமன் செய்திருந்த நிலையில், இன்று தனது 50 ஆவது சதத்தை நிறைவு செய்து சாதனையை புதுப்பித்துள்ளார்.
இதனடிப்படையில், 291 சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 13,777 ஓட்டங்களை பெற்றுள்ள விராட் கோஹ்லி, 71 அரைச்சதங்களையும் 50 சதங்களையும் எட்டியுள்ளார்.