மனைவி கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு!குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் (Bat) கணவனின் தலையில் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேகநபரை திஸ்ஸமஹாராம பொலிஸாரால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.