இலங்கை கிரிக்கெட் நிறுவன ( SLC )செயலாளர் இராஜினாமா


இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதனை பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் கூறியிருந்தனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழு மற்றும் தேர்வு குழுவிற்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமது  பதவிகளிலிருந்து அவர்களே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும்  விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.