12 வயது சிறுவனை பா லி ய ல் து ஷ் பிரயோகம் செய்த விகாராதிபதி கைது!12 வயதுடைய சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தேரர் ஒருவர் யட்டபாத, தினியாவல பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைதானவர் அந்தப் பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதி என தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.