அம்பாறையில் கரையொதுங்கிய சடலம்!

(பாறுக் ஷிஹான்)


அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (12) பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பெரிய நீலாவணை பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.அத்துடன் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.