நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கும் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழிநுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், ஒவ்வொரு பிரதேசத்திலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பாரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள கணினி வள நிலையங்களின் எண்ணிக்கை 100 எனவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.









.jpg)


