முட்டை விலை குறைக்கப்படுமாயின் கேக்கின் விலையை குறைக்க முடியும் : வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் !




முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்படுமாயின், ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் உள்ளூர் முட்டை ஒன்றை 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனால் நுகர்வோருக்கு அவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் மாத்திரமே கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.