மட்டக்களப்பில் நடைபெறவுள்ள 'தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்' பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வு மகாநாடுமட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம், சென்னை செம்மூதாய் பதிப்பகம் மற்றும் செம்புலம் ஆய்விதழ் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம், பிரான்சு வள்ளலார் சன்மார்க்க சங்கம் என்பன இணைந்து நடத்தும் 'தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்' பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வு மகாநாடு 17.05.2024 அன்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில்  ஆய்விதழ் வெளியீடு, மட்டக்களப்பு மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்கள், ஆய்வாளர்களைக் கெளரவித்தல், சிறப்புரைகள், கருத்தரங்க அமர்வுகள் என்பனவும் நிகழவுள்ளது.