துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவிய சந்தேக நபர் கைது !அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதானை பிரதேசத்தில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் அஹுங்கல்ல, வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பில் கண்காணித்து துப்பாக்கிதாரிகளுக்குத் தகவல் வழங்கி உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.