ஆலயத்திற்கு முன்பாக கோ டா ரி வெ ட் டு: 38 வயது இளைஞர் படுகாயம் !


அச்சுவேலி உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை கோடாரி வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செயற்பட்டுவரும் 38 வயதுடைய நபர் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலொன்று கோடரியினால் குறித்த இளைஞரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.